சோலையில் சஞ்சீவனம்

இன்றைய மதிய உணவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘சோலையில் சஞ்சீவனம்’ என்னும் மெடிமிக்ஸ் நிறுவனத்தின் உணவகத்தில் அமைந்தது. அலுவலக நண்பர்களுடன் உணவகத்தினுள் நுழைந்தபோது தோன்றிய எண்ணம் : புத்தருக்கு போதி மரம். நம்மாழ்வாருக்குப் புளியமரம். நமக்கு சஞ்சீவனம். ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒருநாள் இதே உணவகத்தில் சாப்பிட நேர்ந்தபோதுதான் உடல் நலம் குறித்தும் டயட் குறித்தும் முதல் விழிப்புணர்வு உண்டானது. சஞ்சீவனம், முற்றிலும் ‘நேச்சுரோபதி’ என்னும் மருத்துவ நெறிக்கு உட்பட்டு இயங்குவது. இருபத்தியாறு விதமான உணவுப்பொருள்கள் இங்கு பரிமாறப்படுகின்றன. … Continue reading சோலையில் சஞ்சீவனம்